கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க சிகிச்சையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

vijayakanth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரை சந்தித்தனர். அவர் எப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விரைவில் என்ற பதில் மட்டுமே இருந்தது. மேலும் அவர் தொகுதி பங்கீட்டு உறுதிசெய்யப்பட்ட கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். அப்போதும் செய்தியாளர்களிடம் என்னால் பேசமுடியாது என சைகையில் தெரிவித்தார். இந்நிலையில் அவரது முகநூலில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன். என்ன பேசுவேன் என்பதை, அங்குவந்து பாருங்கள். மருத்துவர்கள் அனுமதித்தால் தொடர் பிரச்சாரம் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்த பின்புஈடுபடுவேன். எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள், விஜயகாந்த் நன்றாக உள்ளார், விரைவில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளார். முதலில் முக்கிய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவார் எனக் கூறியுள்ளனர்.