ADVERTISEMENT

கோடிகளில் புரளும் மாநிலங்களவை உறுப்பினர்கள்! - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

05:28 PM Mar 25, 2018 | Anonymous (not verified)

மாநிலங்களவை உறுப்பினர்களில் 88% பேர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தேர்தல்களில் வெற்றிபெறும், போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களின் தகவல்களை வெளியிடும். இந்த நிறுவனம் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் சொத்து விவரம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தற்போது பதவியிலுள்ள 229 மாநிலங்களவை எம்.பி.க்களில் 201 எம்.பி.க்கள் (88%) கோடீஸ்வரர்கள் என அந்தத் தகவல் தெரிவிக்கிறது. மேலும், மொத்த மாநிலங்களவை எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55.62 கோடி எனவும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவர்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மகேந்திர பிரசாத் ரூ.4,078.41 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெயா பட்சன் ரூ.1,001.64 கோடியுடன்இரண்டாவது இடத்திலும், பா.ஜ.க.வின் ராஜேந்திர கிஷோர் சின்கா ரூ.857.11 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, 229 எம்.பி.க்களில் 51 பேர் தங்கள்மீது கிரிமினல் வழக்கு இருப்பதையும் ஒத்துக்கொண்டுள்ளனர். அவர்களில் 20 பேர் மிகத்தீவிரமான கிரிமினல் வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்கள் வேட்புமனுத் தாக்கலின்போது, சம்மந்தப்பட்டவர்கள் கொடுத்த விவரங்களின் படி தொகுக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT