ADVERTISEMENT

50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு - இ.பி.எஸ். பிரச்சாரத்திற்கு பின்னர் ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு முடிவு

03:45 PM Dec 31, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (30.12.2020) திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மனச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (31.12.2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகியைத் தரிசித்து விட்டு பின்னர் ராஜகோபுரம் எதிரே பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு பேசியபோது, ‘ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். அவை அனைத்தையும் செயல்படுத்தி உள்ளோம்’ என்றார்.

ஸ்ரீரங்கம் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் தமிழக முதல்வர் பேச்சைக் கேட்க வந்தார்கள். ஆனால் அடிமனை பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது மிகவும் வேதனை அளிப்பதாகக் கூறிய அரங்கமா நல சங்கத்தினர், ‘ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை பத்தாயிரம் குடும்பத்திற்கு மேலாக வாழ்ந்து வருகிறோம், 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிமனை பிரச்சினையைத் தீர்ப்போம் என வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் அந்த வாக்குறுதியைக் குறித்து அம்மா வழியில் செயல்பட்டு வருகிறோம் என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றரை மாத காலத்திற்குள் அடிமனை பிரச்சினை குறித்து தீர்வு காணாவிட்டால் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க கூடிய நிலை வந்துவிடும். எனவே இப்பிரச்சினையை விரைந்து தீர்க்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும்’ என்று ஸ்ரீரங்கம் அடிமைனை உரிமை மீட்புக்குழு அரங்கமா நல சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT