MLA who visited the affected areas and distributed relief items

Advertisment

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில், திருச்சியில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேரில் பார்வையிட்டார். மேலும், நீர் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொண்டுவருவதோடு, அங்கு இருக்கக் கூடிய பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.