ADVERTISEMENT

"நான் போகும் சாலையில் நீ ஏன் வந்தாய்..." குடிபோதையில் பாம்பைக் கடித்துத் துப்பிய இளைஞர்!

12:58 PM May 06, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


குடி போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற பாம்பைக் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 40 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் கர்நாடகம், டெல்லி, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் வாசலில் சில இடங்களில் பல கிலோ மீட்டர் வரிசையில் நின்று குடிமகன்கள் தங்களுக்குத் தேவையான சரக்கு பாட்டிகளை வீட்டிற்கு வாங்கிச் சென்றார்கள். சில இடங்களில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாய்ப் போனது. காவலர்கள் வந்து நிலைமையைச் சீர் செய்ய வேண்டி இருந்தது.

ADVERTISEMENT


இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மதுக் கடையில் மது வாங்கிக் குடித்த இளைஞர் ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்ற சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பைக் கண்டதும் கோபம் அடைந்துள்ளார். நான் போதும் சாலையில் நீ ஏன் வந்தாய் என்று கூறிக்கொண்டே பாம்பைக் கடித்துக் குதற ஆரம்பித்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் பயந்து போய் அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.சிலர் அதனை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT