wilatha

மியான்மரைச்சேர்ந்த புத்த மதத் துறவிவிலாதா. 69 வயதான இவர், மியான்மரின் யங்கானில் பாம்புகளுக்குப் புகலிடம் அமைத்து, அவற்றைப் பாதுகாத்து வருகிறார். இவர் அடைக்கலம் தரும்பாம்புகளில், சாதாரணவிஷமற்றபாம்புகள் மட்டுமல்ல,ஆளையேவிழுங்கக்கூடிய மலைப் பாம்புகளும், ராஜநாகங்களும் அடக்கம்.

Advertisment

இவர் பாதுகாத்து வரும் பாம்புகள், அவர் மீது ஏறிவிளையாடுகிறது. அவரும்பாம்புகளை மடியில்வைத்துத் தடவிக் கொடுக்கிறார். பாம்புகளைத் தனதுகுழந்தைகள் என்றேகூறுகிறார் விலாதா. இவர் பாம்புகளுக்கு அடைக்கலம் தருவதன்காரணம், அவற்றின் மீதான பாசம் மட்டுமல்ல, அவற்றைஅழிவிலிருந்து காக்கும்முயற்சியும் கூட.

மியான்மர்நாட்டில், பாம்புகள் பிடிபட்டால்ஒன்று கொல்லப்பட்டுவிடும் இல்லையென்றால் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுவிடும். இதனால், பாம்புகள் அழிவதை தடுக்கத்தான், அவற்றிற்குப் புகலிடம் அளித்துப் பாதுகாக்கிறார் புத்த மதத் துறவி விலாதா. இதுபற்றி அவர் கூறும்போது, மக்கள் பாம்புகளைப் பிடித்துவிட்டால், அவற்றைவிற்க வாடிக்கையாளர்களை தேடுவதாகக் கூறுகிறார். மேலும், புத்தமதநாடானமியான்மரில் இப்படி ஒரு சரணாலயம் அமைந்திருப்பதால், மக்கள் பாம்புகளைக் கொல்லாமலோ, விற்காமலோ துறவிகளிடம் தருவதன்மூலம் மேன்மை பெறலாம்எனக் கூறுகிறார் விலாதா.

Advertisment

புத்த மதத்துறவி அமைத்துள்ள, இந்தப் பாம்புகள் சரணாலயத்திற்கு, பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் எனப் பலரும்பாம்புகளைக் கொண்டுவந்து தருகின்றனர். அவைகளைப் பாதுகாக்கும்விலாதா, அவைகள் திரும்பக் காட்டிற்குச் செல்லலாம் எனத் தோன்றும்போது காட்டில்கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும், கெட்டவர்களிடம் சிக்கினால் அவர்கள் அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்பதால், அவை திரும்பப் பிடிபட்டால்அது தனக்கு வேதனையைத் தரும்எனக் கூறுகிறார் விலாதா.