ADVERTISEMENT

ரூ 500 பணம் எடுக்க 30 கிமீ நடந்து சென்ற பெண்... வெறுங்கையுடன் திரும்பிய சோகம்!

06:43 PM May 05, 2020 | suthakar@nakkh…



ரூபாய் 500 பணம் எடுக்க 30 கிலோ மீட்டர், பெண் ஒருவர் நடந்து சென்று வெறுங்கையுடன் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஜன்தன் வங்கி கணக்கு மூலம் ரூபாய் 500 போடப்படும் என்று மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட அடுத்த சில நாட்கள் முதல் ஜன்தன் வங்கி கணக்கு உள்ளவர்கள் எல்லாம் தங்களுடைய வங்கி கணக்கு உள்ள இடங்களுக்கு சென்று, தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்தனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் ஆக்ரா பகுதியில் வசிக்கும் ராதாதேவி என்ற பெண் தன்னுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுப்பதற்காக தனது 15 வயது மகனுடன் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைரசோபாத் மாவட்டத்தில் உள்ள பச்சோரா என்ற இடத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்கள் ஏதுமின்றி நடந்தே அவர் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கிக்கு சென்ற அவர் தன் கணக்கில் பணம் எடுக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு புத்தகத்தை வங்கி அலுவலரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரின் வங்கி கணக்கு ஜன்தன் வங்கி கணக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்த பெண் மீண்டும் நடந்தே ஊர் வந்து சேர்ந்துள்ளார். அவர் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT