அமெரிக்காவில் 10,000-க்கும்மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த போட்டியை அனைத்து சேனல்களும் நேரடி ஒளிப்பரப்பு செய்து வந்த நிலையில், ஒரு பெண் செய்தியாளர் ஒருவர் தன்னுடைய செய்தி சேனலுக்கு போட்டி தொடர்பான விவரங்களை நேரலையில் கொடுத்து கொண்டிருந்த போது, அங்கு ஓடிவந்த வந்த மர்ம நபர் ஒருவர், பெண் செய்தியாளரின் பின்புறத்தில் தட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செய்தியாளர் நேரடி ஒளிபரப்பு போய்க் கொண்டிருந்ததால் சில வினாடிகளுக்கு பிறகு மீண்டும் பேச தொடங்கினார்.

Advertisment

பெண் செய்தியாளருக்கு நேரலையில் நேர்ந்த இந்த கசப்பான சம்பவம் அமெரிக்காவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பின்னால் தட்டியது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஜார்ஜியா மாகாண இளைஞர் நலத்துறை அமைச்சர் டாமி கால்வே என்பது உறுதியாகி உள்ளது. அமைச்சரே இப்படி தகாத முறையில் நடந்து கொண்டது அமெரிக்காவில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.