ADVERTISEMENT

"வோடஃபோன் - ஐடியா நிர்வாகம் மத்திய அரசின் வசம் செல்லுமா?"- தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் விளக்கம்!

06:10 PM Jan 12, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வோடஃபோன் - ஐடியா நிர்வாகம் தொடர்ந்து தங்கள் வசமே இருக்கும் என்றும், இதை கையில் எடுக்க மத்திய அரசு விரும்பவில்லை என்றும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் தெரிவித்துளளார்.

வோடஃபோன் - ஐடியா நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய 16,000 கோடி ரூபாய் வட்டித் தொகையை வழங்க இயலாமல் நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில், அந்நிறுவனம் 16,000 கோடி ரூபாய்க்கு பதிலாக, அதே மதிப்புள்ள 35.8% பங்குகளை மத்திய அரசுக்கு வழங்கியது.

இதனால் வோடஃபோன் - ஐடியாவில் அரசு பெரும்பான்மை பங்குதாரராக உருவெடுக்க உள்ளது. இதனால் வோடஃபோன் ஐடியா நிர்வாகம், மத்திய அரசின் வசம் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை நிர்வகிக்க விருப்பமில்லை என அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும், தற்போது உள்ள இயக்குநர் குழுவே தொடர்ந்து நிறுவனத்தைக் கவனிக்கும் எனவும், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT