ADVERTISEMENT

சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு குடியரசு நாள் அணி வகுப்பில் இடம் தராதது ஏன்? - வைகோ கேள்வி!

11:14 PM Feb 06, 2020 | kalaimohan

குடியரசு நாள் அணிவகுப்பில், சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கேள்வி கேட்க, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

வைகோ கேள்வியும் அமைச்சரின் விளக்கமும் இதோ -

கேள்வி எண் 36.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வைகோ: கீழ்க்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) 2020 ஜனவரி 26 குடியரசு நாள் அணிவகுப்பில், சில மாநிலங்களின் ஊர்திகளுக்கு இடம் மறுக்கப்பட்டதா?

(ஆ) அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள், விளக்கம் தருக.

(இ) எந்த அடிப்படையில், ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன?

(ஈ) கடந்த ஐந்து ஆண்டுகளில், இடம் மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களைத் தருக.

அ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்த விளக்கம்:

குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கின்ற ஊர்திகள் தேர்வு குறித்து, வழிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டு இருக்கின்றன.

அனைத்து மாநில அரசுகள், நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், நடுவண் அமைச்சரகங்கள், துறைகளின் சார்பில், பங்கேற்க இருக்கின்ற ஊர்திகள் குறித்து விண்ணப்பம் பெறப்படுகின்றது.

ஊர்திகளைத் தேர்வு செய்ய, கலை, பண்பாடு, ஓவியம், சிற்பம், இசை, கட்டுமானம், நடனம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஊர்திகள் வெளிப்படுத்தும் கருத்து, வடிவ அமைப்பு, கலை வேலைப்பாடுகள் குறித்து, அறிஞர்கள் குழு ஆய்வு செய்கிறது. பங்கேற்றிட தகுதியான ஊர்திகளைத் தேர்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை அனுப்புகிறது. பேரணியின் நேரம் கருதி, அதற்கு ஏற்ற வகையில் ஊர்திகளை, அறிஞர்கள் குழு தேர்வு செய்கிறது.

இவ்வாறு விளக்கம் அளித்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில், மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் தரப்பிலிருந்து தரவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT