இந்தியாவின் 71 வதுகுடியரசு தினம் நாடுமுழுவதும்நாளை கொண்டப்பட இருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அந்த உரையில், கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளன. தூய்மை இந்தியா திட்டம் அதிக மாற்றங்களை நாட்டில் கொண்டுவந்த திட்டமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

 Padma Awards Announced

Advertisment

மேலும் தற்போது மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கானமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால்அவுஜாவுக்குபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவகர்முகமதுசெரீஃப்க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முகமது செரீஃப் உறவினர்கள் இல்லாத 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகளை செய்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.