ADVERTISEMENT

"கவனிக்கப்பட்ட உடன் நீக்கப்பட்டது"... திருவள்ளுவர் ட்வீட் குறித்து துணை குடியரசு தலைவர் விளக்கம்...

04:24 PM Jan 16, 2020 | kirubahar@nakk…

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது" என்று பதிவிட்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல் திருவள்ளுவர் பற்றிய ஆங்கில பதிவில் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே வெங்கையா நாயுடு காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்கும் புதிய ட்வீட் ஒன்றும் அவரது கணக்கிலிருந்து செய்யப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டில், "முந்தைய ட்வீட் துணை ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களால் தவறுதலாக வெளியிடப்பட்டது மற்றும் அது கவனிக்கப்பட்ட உடனேயே நீக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT