ADVERTISEMENT

நடுவானில் விமான பயணிக்கு உடல்நலக் கோளாறு... சிகிச்சையளித்த மத்திய அமைச்சர்!

08:19 PM Jun 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடுவானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்று கொண்டிருந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ந்த விமானப் பணிப்பெண் விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் உள்ளனரா என உதவி கேட்டார். அப்போது விமானத்தில் அதே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரேவும் பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து 'ஏர் இந்தியா' நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் பயணிக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரான மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் அவுரங்காபாத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT