புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உலக மகளிர் தின விழா காமராஜ் நகர் பகுதியில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்றனர். இதில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் கலந்துகொண்டு பேசினார்.

Advertisment

MLA Jhonkumar about traditional medicine for corona virus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அவர் பேசும்போது, "கொடுக்கா புளி என்ற புளியங்காவை தினந்தோறும் காலையில் சாப்பிடவேண்டும். அதேபோன்று தினந்தோறும் காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் வெயிலில் நின்றால் கரோனா வராது. சின்ன வெங்காயம், ஒரு பூண்டை பச்சையாக காலையில் சாப்பிட்டு வந்தால் கரோனா மட்டுமல்ல எதிர்காலத்தில் வர போகும் புதிய வகை மரோனா நோயும் நெருங்காது" என தெரிவித்தார்.

நோய் எதிர்ப்பு சக்திக்கான பாரம்பரிய மருத்துவத்தை கூறிய எம்.எல்.ஏ ஜான்குமாரை அனைவரும் பாராட்டினர்.