ADVERTISEMENT

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல்...

03:56 PM Oct 01, 2018 | santhoshkumar


மத்திய அரசு இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனங்களை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு சிதம்பரமும், வேதாந்தாவிற்கு மற்ற இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பத்தங்கள் டெல்லியில் இன்று கையெழுத்தாக இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT