ADVERTISEMENT

ஊழியர்கள் எதிர்ப்பு: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு!

05:24 PM Mar 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்கள் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்றும், ஞாயிற்றுக் கிழமையான நாளையும் வங்கி ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி ஊழியர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT