pm modi

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், கடந்த பிப்ரவரி1 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து, பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றிவருகிறார். இந்தநிலையில் இன்று (01.03.2021) அவர், பட்ஜெட்டில் விவசாயத்துறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், இந்தியாவிற்கு அறுவடைக்குப் பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும்புரட்சி தேவை எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

Advertisment

"விவசாயக் கடன் இலக்கை அரசு ரூ .16.50 லட்சமாக உயர்த்தியுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பிற்கான நிதி ரூ. 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மைக்ரோ பாசன நிதி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு, வேளாண் உற்பத்தி அதிகரிப்பிற்குமத்தியில் அறுவடைக்குப் பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி மற்றும் (வேளாண்) மதிப்புக்கூட்டல் தேவை. இது 2-3 தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்தால் நாட்டிற்கு நல்லதாக இருந்திருக்கும்.

வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது".

Advertisment

இவ்வாறு பிரதமர் கூறினார்.