ADVERTISEMENT

“மியான்மரில் சிக்கியவர்கள் நிச்சயம் மீட்கப்படுவர்” - தமிழிசை சௌந்தர்ராஜன்

09:51 AM Sep 19, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தாய்லாந்து நாட்டில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு நாடு திரும்ப முடியாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர்.

ஐடி நிறுவனங்களில் பணி எனக் கூறி இடைத் தரகர்களிடம் பணம் செலுத்திய தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலர் கடந்த மே மாதம் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டேட்டா பதிவிற்கான பணிக்காக அழைத்து செல்லப்பட்ட அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி மியான்மருக்கு மர்ம நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோசடி தொழில் செய்ய வற்புறுத்துவதாகவும் சம்மதிக்கவில்லை எனில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து மியான்மரில் சிக்கிய இந்தியர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “நிச்சயமாக அவர்கள் மீட்டெடுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மிக பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்க என்ன வழிமுறைகள் தேவையோ அனைத்தும் மேற்கொள்ளப்படும். மிக விரைவில் அவர்களை இந்தியாவிற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நிச்சயமாக தொடர்பு கொண்டு இந்த காட்சிகளை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT