ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை உண்டாக்கிய ராகுல்காந்தி வழக்கு!

03:44 PM May 13, 2019 | Anonymous (not verified)

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி சம்பந்தப்பட்ட இரண்டு வழக்கு பரபரப்பை உண்டாக்கியது. ரபேல் ஊழல் தொடர்பான வழக்கில், மோடியை திருடன்னு நீதிபதிகள் சொன்னதா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி சொன்னது சர்ச்சையாகி, பா.ஜ.க.வின் மீனாட்சி லேகி சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதற்கு ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வருத்தத்தை ஏற்காமல், அழுத்தமான மன்னிப்பை கேட்கச் சொன்னது சுப்ரீம்கோர்ட், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ராகுல் தெரிவித்தார். ராகுலுக்கு எதிரான இன்னொரு வழக்கில், இங்கிலாந்திலும் அவர் குடியுரிமை பெற்றிருக்கிறார்னும், இரட்டைக் குடியுரிமை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட முடியாதுன்னும் குற்றம் சாட்டப்பட்டது.

ADVERTISEMENT



இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருப்பதை காங்கிரஸ் பெரும் வெற்றியாகப் பார்க்குது. அதே மாதிரி தேர்தல் களச் சூழல்களை ராகுல் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் கட்சி சீனியர்களோடு தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்திருக்கிறார் ராகுல். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ஜெயித்தால், அமேதி தொகுதியை ராஜினாமா செய்யப்போவதாகவும், அங்கே தன் சகோதரி பிரியங்கா காந்தியை நிறுத்தலாம்னு இருக்கிறதாகவும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறியதாக தகவலும் பரவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT