ADVERTISEMENT

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

10:54 AM Apr 10, 2019 | kirubahar@nakk…

ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வழக்கின் விசாரணை முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், ரஃபேல் வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT