/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fathima-bivi.jpg)
உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கேரள மாநிலம் கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றிபாத்திமா பீவிகாலமானதாகத்தகவல் வெளியாகியுள்ளது. காலமான பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதிஎன்ற பெருமையையும், முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றவர். இவர் தமிழகத்தின் 11வது ஆளுநராக கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 2001 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை பதவி வகித்துள்ளார்.
பாத்திமா பீவி 1950 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு முன்சீப் கோர்ட் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி, மாவட்ட அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி கடந்த 1983 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)