Skip to main content

மாணவனை 2 நிமிடங்களில் 40 முறை அறைந்த ஆசிரியை! வைரலாகும் வீடியோ!!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
மாணவனை 2 நிமிடங்களில் 40 முறை அறைந்த ஆசிரியை! வைரலாகும் வீடியோ!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வருகைப் பதிவேட்டிற்கு பதில் சொல்லாத மாணவரை, ஆசிரியை கடுமையாக தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஹெரிடேஜ் பள்ளியில், 7 வயதுமிக்க சிறுவனை வருகைப்பதிவேட்டிற்கு பதில் சொல்லாத காரணத்தால் ஆசிரியை கடுமையாக தாக்குகிறார். அவர் அந்த சிறுவனை 2 நிமிடங்களில் 40 முறை அறைகிறார். ஆத்திரம் குறையாமல் சுவரில் பலமுறை தள்ளிவிட்டு சித்தரவதை செய்கிறார்.

இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் இதுகுறித்து புகாரளித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மத்திய உயர்கல்வித்துறை வாரியம் கடந்த 2014-ஆம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைத் தாக்காமல் வழிநடத்துமாறு சுற்றறிக்கை அனுப்பியது. குழந்தைகளைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. இந்நிலையில், மாணவனை ஆசிரியை கடுமையாக தாக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்