ADVERTISEMENT

மணிப்பூர் கலவரம்; நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - முதல்வர் பிரேன் சிங்

11:52 AM May 04, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைந்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

மணிப்பூரில் பயங்கர கலவரம்; பற்றி எரியும் வீடுகள்

இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT