Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help

Advertisment

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும்பழங்குடி அல்லாத சமூகங்களும் உள்ளன. மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைந்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் பேரணி நடத்தியது. அதேசமயம், இவர்களுக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பினரும் தங்களது பேரணியை நடத்தினர். இதில், சவ்ரசந்திரபூர் எனும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு கலவரமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கலவரம் நடந்த இடத்தில் கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களை கலைத்துநிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Advertisment

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help

இந்நிலையில், நேற்றிரவு மணிப்பூரின் சில இடங்களில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான மற்றும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் மணிப்பூரில் குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திலும், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களிலும் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

முன்னதாக மணிப்பூர் பாஜக அரசு, பாதுகாக்கப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட்ட காடுகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

Advertisment

அதேபோல், கடந்த வாரம் மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்அம்மாநிலத்தின் சூராசந்த்பூர் பகுதியில்முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்தப் பகுதிக்கு வருகை தரவிருந்தார். ஆனால், அவரது வருகைக்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 28ல் இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் பிரேன் சிங் பங்கேற்க இருந்தார். ஆனால், அதற்கு முன்தினமான 27ம் தேதி சில மர்ம நபர்கள்முதல்வர் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும், முதல்வரின் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் முடக்கப்பட்டன.

தற்போது ஏற்பட்டுள்ள பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையேயான கலவரத்தின் காரணமாக அங்கு ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Manipur meitei issue; Mary Kom asked the Prime Minister for help

மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்துள்ளார்.