ADVERTISEMENT

புவி காந்த புயல்: 40 செயற்கைக்கோள்களை இழக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

03:57 PM Feb 11, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்னும் பெயரில் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விண்ணில் தொடர்ந்து செயற்கைகோளை ஏவி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம், 49 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது.

இந்தநிலையில் விண்ணில் ஏற்பட்ட புவி காந்த புயலால், கடந்தவாரம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஏவிய 49 செயற்கைகோள்களில் 40 செயற்கைகோள்கள் சேதமடைந்ததோடு, புவியில் சுற்று வட்டப்பாதையிலிருந்தும் விலகியுள்ளன. இந்த 40 செயற்கைகோள்களையும் தங்கள் நிறுவனம் இழக்கப்போவதாக ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சூரியன் ஒரு புதிய சுழற்சியில் நுழைவதால், இதுபோன்ற புவி காந்த புயல்கள் அடிக்கடி ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளது கூறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT