sudden fire broke out in Puducherry satellite-related student session

Advertisment

டாக்டர் அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன், விண்வெளி மண்டல இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் சார்பில் மாணவர்கள் தயாரிக்கும் 150 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நாளை மறுதினம் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த செயற்கைக்கோள்களை முழுக்க முழுக்க அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ளனர். இதனையொட்டி புதுச்சேரியில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுடனான தொடர் விரிவுரைக்கான தொடக்க அமர்வு மற்றும் பயிற்சி அமர்வு புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நேரு எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென திருமண மண்டபத்தில் இருந்த மின்சாரப் பெட்டியில் ஒயர் எரிந்து தீப்பொறி பறந்தது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் அலறினர்.

sudden fire broke out in Puducherry satellite-related student session

Advertisment

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற நேரு எம்.எல்.ஏ மின்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தினர். மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் உபகரணங்கள் மண்டபத்தில் இல்லாததால் மண்டபத்தின்வெளியில் இருந்து மணலைஅள்ளிக் கொண்டுவந்து கொட்டித்தீயை அணைத்தனர். மேலும், தீப்பொறி பறந்த மின்சாரப் பெட்டியையும் சரி செய்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழா மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.