ADVERTISEMENT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

08:08 PM Apr 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல், கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அரசியல் தலைமைக் குழுவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் இரண்டாவது முறையாகத் தேர்வாகியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம், கண்ணூரில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள், பல்வேறு மாநில நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் அரசியல் நடவடிக்கை, வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொலிட் பீரோ உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மூன்று பேர் புதிய உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் எடுக்கப்படும் அரசியல் ரீதியான கொள்கை முடிவுகள், தேர்தல் கூட்டணி முடிவுகள், உட்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது உள்ளிட்டவைப் பொலிட் பீரோ உறுப்பினர்களின் முக்கிய பணிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் இரண்டாவது முறையாக அரசியல் தலைமைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், பிரகாஷ் காரத், பினராயி விஜயன், கொடியேறி பாலகிருஷ்ணன், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT