நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களில் வெற்றி பெற்றாலும் அக்கட்சிகள் தேசிய அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு கட்சி தேசிய அந்தஸ்து பெற வேண்டுமெனில், நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 11 இடங்களில் வெற்றி பெற வேண்டும்,நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன் 6 சதவிகித ஓட்டுக்களை பெற வேண்டும்.

Advertisment

communist

மேலும் நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் அதோடு 8 சதவிகித ஓட்டுகளையும் பெற வேண்டும்.இந்த நிலையில் இந்தியா முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து 100 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.அதில் 4 இடங்கள் தமிழகத்தில் பெற்றுள்ளனர்.தேசிய அந்தஸ்துக்கு தேவையான வாக்கு சதவிகிதமும், இடங்களும் பெறாத நிலையில் தேசிய அந்தஸ்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.