ADVERTISEMENT

'ஒரு வருடத்தில் குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வேண்டும்'-மகனுக்கு எதிராக பெற்றோரின் வினோத வழக்கு

01:08 PM May 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு வருடத்தில் குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என மகன் மீது பெற்றோர் வினோத வழக்கு தொடுத்துள்ள சம்பவம் உத்தரகாண்டில் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வசித்து வருபவர் பிரசாந்த். மனைவி மகனுடன் வசித்து வந்த பிரசாந்த் வங்கியில் கடன் வாங்கி மகனை படிக்கவைத்து வேலையும் பெற வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வங்கியில் கடன் வாங்கி 2016 ஆம் ஆண்டு மிகவும் ஆடம்பரமாக திருமணமும் செய்து வைத்துள்ளார். 5 ஸ்டார் ஹோட்டலில் திருமணம், 60 லட்ச ரூபாயில் கார், தேனிலவுக்கு என பல கோடிகளை செலவு செய்துள்ளார். இந்நிலையில் மகனுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் பேரக்குழந்தையை பெற்றுத்தரவில்லை என மனமுடைந்த பெற்றோர், இதனால் தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் இதனால் ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தையை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் இழப்பீடை மகனிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வினோத வழக்கு வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT