/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_47.jpg)
பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப்பெறாத காரணத்தினால் தாயை நிர்வாணப்படுத்தி மகனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பழங்குடியின பெண் ஒருவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில்தொடர்புடையவர்களில் ஒருவரான விக்ரம் சிங் தாக்கூர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வழக்கைவாபஸ் பெறச்சொல்லி மிரட்டியுள்ளார். ஆனால் வழக்கிலிருந்து பின் வாங்கமாட்டோம் என்று பெண் வீட்டார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம் சிங் தாக்கூர் தரப்பினர் கும்பலாகச் சேர்ந்து பெண்ணின் வீட்டிற்குச் சென்றுஅவர்கள் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டையும் சூறையாடியுள்ளனர்.
பின்பு அந்தப்பெண்ணின்சகோதரரை வழியில் பார்த்த விக்ரம் சிங் தாக்கூரின் கும்பல், ஒன்றாகச் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். மகனை அடிக்கும் தகவலைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண் மற்றும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர். பின்புஅவரது தாயாரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பித்த பாதிக்கப்பட்ட பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடியவர்களைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)