ADVERTISEMENT

இந்து அமைப்பின் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

09:48 PM Jan 08, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது ஹிண்டலகா கிராமம். இக்கிராமத்தில் ரவி கோகிடகோரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீராம் சேனாவின் மாவட்டத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

நேற்று மாலை ரவியும் அவரது கார் ஒட்டுநரும் அவரது காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரவி சென்ற கார் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் ரவியின் தாடையிலும் ஓட்டுநரின் கையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே காரை ஓட்டுனர் நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் உடனே பெலகாவி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு தாக்குதலைக் கேள்விப்பட்டு மருத்துவமனை முன்பு இந்து ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையின் முன்பு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தொடர்ந்து விசாரித்ததில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அபிஜிதா சோம்நாத் பத்கந்தா (41) , ராகுல் நிங்கானி (32), ஜோதிபா கங்காராம முதாகேடகர் (25) என மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூவரையும் விசாரித்ததில் காயமடைந்த ரவி கோகிடகராவுக்கும் அபிஜிதா பத்கந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட நிதி தகராறுதான் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT