students and womens teacher incident police investigation

Advertisment

மாணவிகள் உள்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் முகமது அசாருதீன் என்பவர், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானது. மேலும், மாணவ, மாணவிகளுக்கும் முகமது அசாருதீன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்யக் கோரி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ஆசிரியரைத் தேடி வருகின்றனர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.