ADVERTISEMENT

பள்ளி மாணவியின் ஷூவுக்குள் 'நாகப்பாம்பு' நூலிழையில் உயிர்தப்பிய சிறுமி!

09:07 PM Nov 19, 2019 | kalaimohan

பள்ளிக்கு செல்ல எதார்த்தமாக ஷூ அணியும்போது பள்ளி மாணவியின் ஷுவுக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை தக்க நேரத்தில் கண்டுகொண்டதில் மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிகழ்வு கேரளத்தில் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கரிக்ககொம்கோவில் பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பவத்தன்று ஸ்கூலுக்கு செல்வதற்காக ஷூவை எடுத்து எதார்த்தமாக காலில் அணிய முற்பட்டுள்ளார். அப்பொழுது ஷூவுக்குள் ஏதோ ஒன்று நெளிவதை போன்று உணர்ந்து உடனடியாக மாணவி ஷூவை தூக்கி வீசியுள்ளார். அப்பொழுது ஷூ உள்ளிருந்து குட்டி நாகப்பாம்பு ஒன்று வெளியே தலைகாட்டியதால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து வீட்டில் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.


உடனடியாக வந்த மாணவியின் தாய் பாம்பு வெளியே போகாமலிருக்க அலுமினிய பாத்திரம் ஒன்றால் ஷூவை மூடி செங்கற்களை வைத்து மூடிவிட்டு கேரளாவில் பாம்பு பிடி நிபுணராக விளங்கும் பாபா சுரேஷ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பிறகு அங்கு வந்த பாபா சுரேஷ் பாத்திரத்தை எடுத்து விட்டுச் ஷூவை எடுக்கையில் ஷூவில் குட்டி நாகபாம்பு பதுங்கி படுத்துக் கொண்டிருந்தது. அந்த குட்டி பாம்பை லாவகமாக பிடித்த பாபா சுரேஷ் மழைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என யாராக இருந்தாலும் தங்களது காலணிகளை, ஷூக்களை போடுவதற்கு முன் வெளியில் வைத்து நன்றாக கீழே தட்ட வேண்டும். உள்ளே ஏதேனும் இதுபோன்ற உயிரினங்கள், பூச்சிகள் அண்டி இருக்கின்றதா என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஸ்கூல் ஷூவுக்குள் நாகப்பாம்பு இருந்ததை சுதாரித்துக்கொண்ட பள்ளிச் சிறுமி நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT