Cruelty to the boy; Transgender gets 7 years in jail

Advertisment

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த திருநங்கைக்கு கேரள நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ளது சேராயின்கீழ். அந்த பகுதியில் வசித்து வந்த சச்சு என்றதிருநங்கைக்கும் அதே பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுவனுக்கும் ரயில் பயணத்தின் பொழுதுநட்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சிறுவனை திருவனந்தபுரம் தம்பனூர் பகுதிக்கு அழைத்து வந்து திருநங்கை சச்சு பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் தனக்கு நடந்தது பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருநங்கை சச்சுவை கைது செய்துதிருவனந்தபுரம் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணையின் இறுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கை சச்சுவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தொகையைக் கட்டாவிடில் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.