Skip to main content

திருவனந்தபுரம் நவராத்திரி விழா... குமரில் கோலாகல கொண்டாட்டம்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் நவராத்திரி விழாவுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
 

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த காலத்தில் 1726- ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த பாரம்பரிய நவராத்திரி விழா குமரி கேரளா நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் விதமாக ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு குமரி மாவட்டம் சுசிந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகமும், வேளி குமாரகோவில் முருகன் விக்ரகமும், பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்ரகமும் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

 Thiruvananthapuram Navaratri Celebration kanyakumari


இந்த ஆண்டு நவராத்திரி விழா 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் புறப்பாடு நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்தது. இதில் கேரளா தொல்லியியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமசந்திரன், தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா, கோவளம் எம்எல்ஏ வின்சென்ட், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், திருவனந்தபுரம் எஸ்பி அசோகன், பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, குமரி எஸ்பி ஸ்ரீநாத் உட்பட பொதுமக்கள் என ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

 Thiruvananthapuram Navaratri Celebration kanyakumari

முன்னதாக முக்கிய நிகழ்வாக தினம்தோறும் பூஜைகள் நடந்தப்படும் மன்னர் உடைவாழ் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பூஜையில் இருந்த வாளை கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு சாமி விக்ரகங்கள் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி சென்றது. அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
 

 Thiruvananthapuram Navaratri Celebration kanyakumari


சாமி விக்ரகங்கள் ஊர்வலத்தில் கேரளா மற்றும் குமரி போலீசார் 500- க்கும் மேற்பட்டோர் இணைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாமி விக்ரகங்கள் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதில் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் கோட்டைக்கம், நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்படுகிறது.


பின்னர் சாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்று பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து 10-ம் தேதி புறப்பட்டு 12-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.


 

சார்ந்த செய்திகள்