ADVERTISEMENT

“எனக்காக எதையாவது கேட்பதைவிட சாவது மேல்” - சிவராஜ் சிங் சவுகான்

03:09 PM Dec 13, 2023 | mathi23

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டது. போபாலில் நேற்று முன் தினம் (11-12-23) நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி பா.ஜக.வின் இந்த முடிவு சிவராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்த முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டு இன்று (13-12-23) மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று (12-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ மத்தியப் பிரதேசத்தில் தற்போது நடைபெறும் வரும் திட்டங்களை மோகன் யாதவ் தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி முடித்து வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் மத்திய பிரதேசம் புதிய உச்சத்தை எட்டும். அவரை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்.

ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக எதையாவது கேட்பதைவிட சாவது மேல். எதன் காரணமாகவே நான் டெல்லி செல்ல மாட்டேன். பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் 2023 தேர்தல் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் தொடர்ந்து கட்சிக்காக உழைப்பேன். இது தான் என் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஒவ்வொரு தொண்டருக்கும் சில வேலைகள் உள்ளன. அது மாதிரி எனக்கு ஒதுக்கப்படும் எந்த வேலைகளையும் நான் செய்வேன்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT