mp minister

மத்தியப் பிரதேசமாநிலம் சிதிபகுதியில்இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது. பேருந்தைஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டைஇழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

விபத்து நடந்த இடத்திற்கு மாநிலபேரிடர்மீட்புப் படை, விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் பேருந்து கவிழ்ந்தகால்வாயிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து அம்மாநிலஅமைச்சர்துளசி சிலாவத், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். முதல்வரின் அறிவுறுத்தலின் படி எங்களில் இருவர் சிதிக்குச் செல்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன், அவர்களின் தகவல்களின்படி சுமார் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன"எனத் தெரிவித்துள்ளார்.