மத்தியப் பிரதேசமாநிலம், சிதிபகுதியில்இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது. பேருந்தைஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டைஇழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய மற்றவர்களையும் மீட்கும்பணிகள்நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், தற்போது மீட்புப் பணிகள்நிறைவடைந்துவிட்டதாகவும், இந்த விபத்தில்45 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்தியப் பிரதேசமுதல்வர்சிவராஜ் சிங் சவுகான்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மீட்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. 45 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில்பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரணநிதியிலிருந்து 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும்வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியப் பிரதேசஅரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கும்எனஅம்மாநிலமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில்பலியானவர்களின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.