ADVERTISEMENT

ஷெரிக் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் தான் ; பொறுப்பேற்ற அமைப்பு - கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு 

04:26 PM Nov 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவரின் மீதுள்ள பழைய வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் ஒரு வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது, அதேபோல் தேசியக் கொடியை எரித்தது, நாட்டுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய குறிப்புகளை வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே கர்நாடக காவல்துறை ஷெரீக் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு கடந்த வாரம் 15 ஆம் தேதி முதல் குற்றவாளியாக முகமது ஷெரீக்கை சேர்த்து டெல்லியில் இருக்கக்கூடிய தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. இந்நிலையில்தான் கடந்த 19ஆம் தேதி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில், தற்பொழுது 'இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் ஒரு அறிக்கையும், ஒரு வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் முகமது ஷெரீக் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்றும், இதுபோல் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இதுகுறித்து விசாரணை நடத்தும் காவல் நிலையங்கள், புலனாய்வு அலுவலகங்கள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக போலீசார் இந்த அறிக்கையை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெயரில் வெளியான அறிக்கை உண்மையா போலியா அதன் உண்மைத்தன்மை மற்றும் அந்த அமைப்பின் பின்னணி விவரம் ஆகியவற்றை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT