ADVERTISEMENT

நில மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத் கைது! 

10:56 AM Aug 01, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

நில மோசடி வழக்கில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடியிருப்புப் பகுதியை மாற்றியமைப்பதில் நில மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் 24 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும், இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (31/07/2022) காலை சோதனை நடத்தினர். அப்போது, 11.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டிருப்பதாக, அவரது சகோதரர் சுனில் ராவத் தெரிவித்துள்ளார்.

இன்று (01/06/2022) காலை 11.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT