/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/l-murugan-art.jpg)
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிசோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் மாற்று அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பேசுகையில், "அமலாக்கத்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். எனவே அமலாக்கத்துறையினருக்குகிடைத்த தகவலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. எனவே இந்த சோதனை யாருடைய தூண்டுதலின்பேரிலும் நடைபெறவில்லை" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)