Skip to main content

"கரோனா விவகாரத்தில் சீனாவைப் போல் சர்வாதிகாரமாக நடக்க வேண்டும்.."

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
 

gh



இந்தியாவில் இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் சிவசேனா தலைவர் சஞ்சஞ் ராவத் அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். " ஒருநாள் ஊரடங்கு செய்வதால் எந்தப் பலனும் இல்லை, சீனாவைப் போல் சர்வாதிகாரமாகச் செயல்பட வேண்டும். மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்"  என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நில மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத் கைது! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022


 

Sanjay Rawat arrested in land scam, illegal money transfer case!

 

நில மோசடி வழக்கில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடியிருப்புப் பகுதியை மாற்றியமைப்பதில் நில மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் 24 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும், இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

 

இந்த நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (31/07/2022) காலை சோதனை நடத்தினர். அப்போது, 11.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டிருப்பதாக, அவரது சகோதரர் சுனில் ராவத் தெரிவித்துள்ளார். 

 

இன்று (01/06/2022) காலை 11.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

 

Next Story

பிஎம் கேர்ஸ் நிதி எதற்கு இருக்கிறது? நாடாளுமன்றத்தில் சீரிய சஞ்சய் ராவத்...

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

sanjay raut questions use of pm care

 

 

பி.எம். கேர்ஸ் நிதி குறித்து சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

 

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் மாநிலங்களவையும், மதியம் மக்களவையும் கூடி கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கரோனா தடுப்பு மற்றும் பி.எம் கேர்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது அந்த உரையில், "என்னுடைய தாயும், என் தம்பியும் கரோனா பாதித்து ஐசியுவில் இருக்கிறார்கள். எனவே கரோனாவின் பயங்கரம் என்னவென்று என் அனுபவம் எனக்கு கற்று தந்துள்ளது.

 

பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே அன்று கேள்வி எழுப்பினார். மகாராஷ்ட்ரா அரசு கோவிட்-19-ஐ கையாளுவது பற்றி விமர்சித்தார். ஆனால் நெருக்கடியான பகுதியான தாராவி உட்பட பலபகுதிகளில் கரோனா பரவல் அபாயத்தை தடுத்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி வகுத்த விதிமுறைகளை மகாராஷ்ட்ரா அரசு கடைப்பிடித்து வருகிறது.

 

பிபிஇ கவச உடைகள், உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற கரோனா தடுப்பு உத்திகளுக்கான நிதியை மகாராஷ்ட்ராவுக்கு வழங்குவதை மத்திய அரசு செப்.1 முதல் நிறுத்தியது. இதனால் மகாராஷ்ட்ர அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.50 கோடி செலவாகிறது. மாநிலங்களுக்கு உதவுவதற்கு இல்லாமல் வேறு எதற்காக பிஎம் கேர்ஸ்?" எனத் தெரிவித்தார்.