ADVERTISEMENT

சபரிமலை செல்ல இன்று மாலை தொடங்குகிறது முன்பதிவு!

12:11 PM Dec 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு செல்ல இன்று (28/12/2020) மாலை முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யலாம். www.sabarimalaonline.org என்ற இணைய தளத்தில் இன்று (28/12/2020) மாலை 06.00 மணி முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 31- ஆம் தேதி முதல் ஜனவரி 19- ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT