ADVERTISEMENT

பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீண்டும் பணியில் சேர மறுப்பு!!!

07:19 PM Apr 10, 2020 | rajavel

கேரளா மாநிலம், கோட்டயத்தை சோ்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் கண்ணன் கோபிநாத் (34). 2012 பேட்ச்சான கண்ணன் கோபிநாத் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முன் சமூக செயல்பாட்டில் அதிகம் ஈடுபாடு கொண்டவா். ஒரு தொண்டு நிறுவனத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டதோடு அங்கு பணிபுரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ADVERTISEMENT




பின்னா் ஐ.ஏ.எஸ். தோ்வில் தோ்வாகி, மியான்மா் மற்றும் மிசோரத்தில் கலெக்டராக பணியாற்றி வந்தார். மிசோரம் மாநில மின்சார வாரிய செயலாளா் மற்றும் கிராமபுற மேம்பாட்டு செயலாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மத்தியில் 2 ஆவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அங்கிகாரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை கடந்த ஜீலை மாதம் ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாத், பாஜக ஆட்சியில் மக்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT



கண்ணன் கோபிநாத்தின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனையில் வைத்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அதன் பிறகு ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் தற்போது நாடு முமுவதும் கரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசுகளும் போராடி வருகின்றன.

இந்த நிலையில்தான் கண்ணன் கோபிநாத்தை மீண்டும் பணியில் சோ்த்து, கரோனா வைரஸை தடுக்கும் விதமாக மாநில அரசு ஈடுபடுத்தி கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கண்ணன் கோபிநாத்தின் விருப்பம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கு கண்ணன் கோபிநாத் மீண்டும் பணியில் சேர மறுப்பு தெரிவித்ததுடன் தன்னுடைய சொந்த நிலையில் மக்களுக்கு உதவ இருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே கண்ணன் கோபிநாத் பணியில் இருக்கும்போது, அதாவது கேரளாவில் ஏற்பட்ட கொடூர மழையின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக விடுப்பு எடுத்து கொண்டு அதிகாரிகளுடன் சோ்ந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT