ADVERTISEMENT

விவசாய மசோதா எதிர்ப்பு... எட்டு எம்.பி க்கள் சஸ்பெண்ட்...

09:50 AM Sep 21, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு எம்.பி க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நேற்று காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.

இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு எம்.பி க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT