ADVERTISEMENT

தொலைபேசி மூலம் பிரதமர் மோடியுடன் பேசிய ராகுல் காந்தி...

04:38 PM Aug 09, 2019 | kirubahar@nakk…

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாநிலத்தின் பல இடங்கள் தனி தீவுகள் போல காட்சியளிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கடும் மழையால் கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளத்தால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேர் மாயமாகியுள்ள நிலையில், வயநாடு எம்.பி யான ராகுல் காந்தி கேரளா வெள்ளம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வயநாடு மற்றும் ஒட்டுமொத்த கேரளா மாநிலத்திற்கும் உடனடியாக தேவையான உதவிகளை வழங்குவது குறித்து அவர் ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, " நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மற்றும் ஒட்டுமொத்த கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்து தரக்கோரி பிரதமரிடம் பேசினேன். இந்த மோசமான பேரழிவிலுருந்து கேரளா மாநிலத்தை மீட்டெடுக்க தேவையான எந்தவொரு உதவியையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT