rahul gandhi mp talks about modi one day answer said situation 

காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவரும்கேரள மாநிலம் வயநாடு மக்களவைத்தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி எம்பி, ஒருநாள் சுற்றுப் பயணமாக கேரளா வந்துள்ளார். அப்போது நேற்று மாலை மீனங்காடி என்ற பகுதியில்நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது அனைத்தும்உண்மையாகும். ஆனாலும் நான் பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம்அவருடன் அதானியும்செல்வது ஏன்?வெளிநாடுகளில் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களில்அதானி கையெழுத்திடுவதுஎப்படி?அதானிக்காக இங்கு பல்வேறு சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்துவிமான நிலையங்களையும் அதானி வாங்குவது எப்படி? இதற்கு எல்லாம் காரணம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் தான்.

Advertisment

நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்கு எல்லாம் ஆதாரம் வேண்டும் என்று நாடாளுமன்ற செயலாளர் கூறினார். அனைத்திற்கும் ஆதாரம் தருகிறேன் என்று நான் கூறினேன். மோடி என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துகிறார். ஆனால் அவற்றை எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. என்னுடைய பெயருடன் நேரு என்ற பெயரைஏன் சேர்க்கவில்லை என்றும்காந்தி என்று சேர்த்ததுஏன் என்றும் கேட்கிறார். இந்தியாவில் தந்தையின் குடும்ப பெயரைத்தான் பின்னால்சேர்ப்பார்கள் என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

Advertisment

மோடியின் கைகளில் அனைத்து ஏஜென்சிகளும் இருக்கலாம்அதற்காக எல்லாம் நான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. கண்டிப்பாக ஒருநாள் சத்தியத்திற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும்" என்றுபேசினார்.