ADVERTISEMENT

கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையைச் சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!

11:25 PM Aug 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் கோவிட் மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக, கரோனா நோயாளிகள் புகார் எழுப்பினர்.

புகாரை தொடர்ந்து, ஆய்வு செய்த புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கழிவறை சுத்தமாகப் பராமரிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்த நிகழ்விற்குப் பிறகு மருத்துவ நிர்வாகம் கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை முறையாகப் பராமரிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆய்விற்குச் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கம் போல நேற்று முன்தினம் (29.08.2020) ஆய்விற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கழிவறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு, அவரே சுத்தம் செய்யத் தொடங்கினார். மேலும், அங்கிருந்து தூய்மைப் பணியாளரிடம், இதே போன்று சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தினார்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் இந்தச் செயலைக் கண்டு அங்கிருந்த நோயாளிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT