ADVERTISEMENT

தான் டீ விற்ற ரயில்வே நிலையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி!

10:29 AM Jul 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி, நேற்று (15.07.2021) உத்தரப்பிரதேச மாநிலத்திற்குச் சென்று சில வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக குஜராத்தில் 1,100 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். அம்மாநிலத்தின் அகமதாபாத்தில் நீர்வாழ் உயிரின கண்காட்சியகம், ரோபோ கண்காட்சியகம், இயற்கை பூங்கா உள்ளிட்டவற்றை திறந்துவைக்கிறார்.

அதுமட்டுமின்றி விமான நிலையத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காந்தி நகர் இரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இங்கு 318 அறைகளைக் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், காந்தி நகர் - வாரணாசி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் இரயில் சேவையையும், காந்தி நகர் - வரேதா இரயில் சேவையையும் கொடியசைத்து திறந்துவைக்கும் பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட வாட்நகர் இரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.

வாட்நகர், பிரதமர் மோடியின் சொந்த ஊராகும். இந்த வாட்நகர் இரயில் நிலையத்தில்தான் சிறு வயதில் தான் டீ விற்றதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சிறுவயதில் டீ விற்ற இடத்தை இன்று தானே திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT