
குஜராத்தில் வருகிற21 ஆம் தேதி, மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலில், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போடக்தேவ் வார்டில்பாஜகசார்பில்போட்டியிட சோனல் மோடி விண்ணப்பித்தார்.
சோனல் மோடி, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரஹலாத் மோடியின்மகள் என்பதும்,குஜராத் நியாயவிலைக் கடைகள் சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஜராத் பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில், சோனல்மோடியின்பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து குஜராத் பாஜக,பாஜகதலைவர்களின் உறவினர்களுக்கு சீட்வழங்கக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு சீட்வழங்கக்கூடாது என்ற கட்சியின்விதிமுறையின் கீழ், சோனல் மோடிக்குசீட்மறுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)